வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...

Saturday, September 5, 2009

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!!!!

இந்த கோழி இருக்கே கோழி அது மண்ணுல கொத்தி கொத்தி எதுனா சாப்டுகிட்டே இருக்கும். ஒரு சிமெண்ட் தரையா பாத்துச்சுன்னா சர் புர்ன்னு மூக்கை(அலகை) தேய்ச்சு கூர்மையா ஆக்கிகிட்டு திரும்பவும் மண்ணுக்கு போய் கொத்தி கொத்தி திங்க ஆரம்பிச்சுடும்!அதுபோல கொஞ்சம் மூக்கை தீட்டிக்கலாமேன்னு இந்த மொக்கை.

நாம படிச்ச பள்ளி, செக்.ஷன், வாத்தியார் பேர் இதல்லாம் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கும். முதல்ல எனக்கு இருக்கான்னு பாப்போம்.

* 1 வது C - லெஷ்மி டீச்சர் - தேசிய ஆரம்ப பள்ளி

* 2 வது B - காமாட்சி டீச்சர் - "

* 3 வது C - குண்டு சார் - "

* 4 வது C - தியாகராஜன் சார் - "

* 5 வது A - மனசுல இருக்கு வரமாட்டங்குது - "

* 6 வது F - விசாலம் டீச்சர் - தேசிய உயர் நிலைப்பள்ளி

* 7 வது B - சரோஜா டீச்சர் - D.B.T.R.தேசிய மேல்நிலைப்பள்ளி

* 8 வது B - அதே சரோஜா டீச்சர் - "

* 9 வது F - சந்தான கோபாலன் சார்- "

* 10 வது C - N. வெங்கட்டராமன் சார் - "

* 11 வது A - K.ராஜேந்திரன் சார் - "

* 12 வது A - K. பத்மநாதன் சார் -

"அப்பாடா!
உங்களுக்கு ஞாபகம் இருந்தா சொல்லுங்க atleast section மட்டுமாவது!!
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!!!!!!!

(இது ஒரு மீள் பதிவு)

2 comments:

வல்லிசிம்ஹன் said...

எனக்கு ஞாபகம் இருப்பதெல்லாம் பெரிய டீச்சரும்,ஒரு தமிழ் மாஸ்டரும் தன் ஆதாரப்பள்ளியில்:)

உயர் நிலைப் பள்ளியில்

6 அம் வகுப்பு ..ஞானசௌண்தரி

7 ஆம் வகுப்பு சுந்தரா மிஸ்
8 ஆம் வகுப்பு மிஸ் பாலின்
9 ஆஅம் வகுப்பு மிஸ் க்ளாரா ஜேம்ஸ்
10 ஆம் வகுப்பு திரு ரெட்டியார்
11 ஆம் வகுப்பு மிஸ் நவமணி.
முடிஞ்சது வரிசை.:)

ராமலக்ஷ்மி said...

செக்‌ஷன் யாரும் க்ராஸ் செக் பண்ணப் போறதில்லை:)! ஆனால் பெயரை சரியாகச் சொல்லணுமே. முகங்கள் நினைவில் இருந்தாலும் சிலரின் பெயர்கள்:(?

1ஆவது A: ஒண்ணாங்க்ளாஸ் சிஸ்டர் என்றேதான் சொல்வாங்க.
2A: கேத்தரின்
3C:ப்ரேமா மிஸ்
4A:
5B:
6A: Sorry Teachers:(!
7A: கோதை ஆண்டாள்
8th,9th,10th,11th: நான்கு வருடங்களுக்கும் என் கூடவே அடுத்தடுத்த வகுப்பிற்கு வந்து விட்ட ஃபாத்திமா மிஸ்.

எவ்வளவு மார்க் கொடுப்பீங்க அபிஅப்பா:)?