வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...

Saturday, September 5, 2009

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!!!!

இந்த கோழி இருக்கே கோழி அது மண்ணுல கொத்தி கொத்தி எதுனா சாப்டுகிட்டே இருக்கும். ஒரு சிமெண்ட் தரையா பாத்துச்சுன்னா சர் புர்ன்னு மூக்கை(அலகை) தேய்ச்சு கூர்மையா ஆக்கிகிட்டு திரும்பவும் மண்ணுக்கு போய் கொத்தி கொத்தி திங்க ஆரம்பிச்சுடும்!அதுபோல கொஞ்சம் மூக்கை தீட்டிக்கலாமேன்னு இந்த மொக்கை.

நாம படிச்ச பள்ளி, செக்.ஷன், வாத்தியார் பேர் இதல்லாம் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கும். முதல்ல எனக்கு இருக்கான்னு பாப்போம்.

* 1 வது C - லெஷ்மி டீச்சர் - தேசிய ஆரம்ப பள்ளி

* 2 வது B - காமாட்சி டீச்சர் - "

* 3 வது C - குண்டு சார் - "

* 4 வது C - தியாகராஜன் சார் - "

* 5 வது A - மனசுல இருக்கு வரமாட்டங்குது - "

* 6 வது F - விசாலம் டீச்சர் - தேசிய உயர் நிலைப்பள்ளி

* 7 வது B - சரோஜா டீச்சர் - D.B.T.R.தேசிய மேல்நிலைப்பள்ளி

* 8 வது B - அதே சரோஜா டீச்சர் - "

* 9 வது F - சந்தான கோபாலன் சார்- "

* 10 வது C - N. வெங்கட்டராமன் சார் - "

* 11 வது A - K.ராஜேந்திரன் சார் - "

* 12 வது A - K. பத்மநாதன் சார் -

"அப்பாடா!
உங்களுக்கு ஞாபகம் இருந்தா சொல்லுங்க atleast section மட்டுமாவது!!
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!!!!!!!

(இது ஒரு மீள் பதிவு)

ஆசிரியர் தின வாழ்த்துக்களுடன்....

ஜே.ஆர்.ராமமூர்த்தி சார் (தலைமை ஆசிரியர் - ஓய்வு)
ராமபத்ரன் சார் (தமிழாசிரியர்)
NV-1 சார்
NV-2 சார்
புஷ்பவல்லி மேடம் (தலைமை ஆசிரியர் - ஓய்வு)
கே.ராஜேந்திரன் சார் (தலைமை ஆசிரியர்)
கே.பத்மநாபன் சார் (வேதியியல்)
ராமனாதன் சார் (தமிழ்)
கே.விஸ்வநாதன் (KV)சார்
BMS சார் (கணக்கு)
அரங்கராஜன் சார் (தமிழ்)
ராமமூர்த்தி சார்
முத்துகுமரசுவாமி சார் (வணிகவியல்)
சந்தானகோபாலன் சார் (NCC)
சரோஜா மேடம்
லெட்சுமி மேடம் (ஆங்கிலம்)
சேஷாத்ரி சார் (வரலாறு)
விஜயரெங்கன் சார்
ஜெயசீதா மேடம் (கணிதம்)
காஞ்சிநாதன் சார் (இயற்பியல்)
விஜயலட்சுமி மேடம்
ராமநாதன் சார் (வரலாறு)
அபிதாகுஜாம்பாள் மேடம்
வெங்கட்ராமன் சார் (ஓவிய ஆசிரியர்)
சண்முகம் சார் (தமிழாசிரியர்)
மதியழகன் சார்
கலியமூர்த்தி சார்
ரவிக்குமார் சார் (விளையாட்டு)
ரவிச்சந்திரன் சார் (விளையாட்டு)
கிராப்ட் சார்

இன்னும் பலர் நினைவுகளினூடாய், முகம் அறிந்து, பெயர் மறந்து போன டிபிடிஆர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு,

மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து சிறப்பானதொரு கல்வி கற்று,பல்வேறு நாடுகளிலும்,பல நிலைகளிலும் பணியாற்றிக்கொண்டிருக்கும் மாணவர்கள் சார்பாக ஆசிரியதின வாழ்த்துக்களினை தெரிவித்து வணங்கி மகிழ்கின்றோம்!