வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...

Sunday, July 11, 2010

16. நமது பள்ளியில் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி விவரம்

சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் நமது பள்ளி 96 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

மொத்தம் தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை 416

தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை: 398

பள்ளியின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் : மணிகண்டன் 486/500

பள்ளியில் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவன் : மணிகண்டன் 481/500

பள்ளியிலிருந்து மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற முயற்சி செய்யப்பட்டது. மாணவர் மணிகண்டனிடம் கேட்ட பொழுது தான் தமிழ்ப் பாடத்தில் மட்டும் சிறிது மதிப்பெண் குறைந்து விட்டதாகச் சொன்னார்.

பள்ளித் தலைமையாசிரியர் திரு கே. இராஜேந்திரனிடம் கேட்டபொழுது “மாணவர்கள் மொழிப் பாடத்தில் அதிக அளவு கவனம் செலுத்துவதில்லை, மற்றும் பெற்றோரும், தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே போதுமானது என்ற எண்ணத்தை குழந்தைகளிடம் விதைப்பதினால் மாணவர்களும் அந்தப் பாடங்களில் அதிக அக்கறை செலுத்துவதில்லை“ என்று கூறினார்.

இந்த வருடம் பள்ளி்யின் தமிழ் விடைத்தாள்கள் பாளையங்கோட்டை தமிழாசிரியர்களிடம் சென்றதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழாசிரியர்கள் சிறுசிறு சந்திப்பிழைகளுக்கெல்லாம் மதிப்பெண் குறைத்து விடுவார்கள் மாணவர்கள் எழுதும் போது மிகமிக கவனமாக எழுதவேண்டும் என்று கூறினார்.

இந்த வருடம் மாநில அளவிலான முதல் மதிப்பெண் 591/600 என்றும் நமது பள்ளி மாணவர் மணிகண்டன் 5 மதிப்பெண்களில் முதலாமிடத்தைத் தவறவிட்டது மிக வருந்தத்தக்கதெனவும், அடுத்த (நடப்பு) கல்வியாண்டில், முதல் மதிப்பெண் பெறக்கூடிய அளவிலான மாணவர்கள் இருக்கிறார்களெனவும் தலைமையாசிரியர் தெரிவித்தார்.

பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்திலிருந்து - சீமாச்சு...

3 comments:

ராம்ஜி_யாஹூ said...

பாளையம்கோட்டை தமிழாசிரியர்கள். மதிப்பெண்களை குறைப்பார்களா.

என்ன செய்தி சொல்ல வருகிறீர்கள் அந்த வாக்கியத்தில்.

Seemachu said...

ராம்ஜி,
நான் படிக்கும் காலங்களிலெல்லாம், வருடாந்திர தேர்வுகளிலும், தமிழ் மன்றத் தேர்வுகளிலும் “பாளையங்கோட்டை” என்பது ஒரு பயம் தரும் குறியீடு. தமிழ் வினாத்தாள் பாளையங்கோட்டை தமிழாசிரியர்களால் எதிர்பார்ப்பதை விட மிகக் கடினமாக இருக்கும் என்பது ஒரு புரிந்துணர்வு (perception). அதே போல் விடைத்தாள்கள் பாளையங்கோட்டை ஆசிரியர்களால் மதிப்பிடப்பட்டால் மிகத் துல்லியமாக (no lenience) திருத்தப்பட்டு எதிர்பார்ப்பதை விட குறைவான மதிப்பெண்களே வரும். இது நான் சொல்வது 30 ஆண்டுகளுக்கு முன்பு. இப்பொழுதும் அப்படித்தான் இருக்கிறது போலும். அப்பொழுதிருந்தே நேரிடையாக அனுபவப்பட்டவன் என்ற முறையில் மிகச் சரியாக புரிந்தது. உங்களால் முடிந்தால் தற்போதைய மாணவர்க்ளிடமோ ஆசிரியர்களிடமோ இதை விசாரித்து விளக்குங்களேன்..


பாளையங்கோட்டைப் பள்ளிகளில் படித்த மாணவர்களே விளக்கினாலும் நன்றாக இருக்கும்

Seemachu said...

தமிழ் வினாத்தாள் பாளையங்கோட்டை தமிழாசிரியர்களால் ** குறிக்கப்பட்டால் ** எதிர்பார்ப்பதை விட மிகக் கடினமாக இருக்கும் என்பது ஒரு புரிந்துணர்வு (perception).