வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...

Sunday, March 4, 2012

34. பள்ளி ஆண்டுவிழா தொகுப்பு - புகைப்படங்கள்ஆண்டு விழா 23-02-2012 வியாழக்கிழமை மாலை 3.00 மணி அளவில் பள்ளி வழிபாட்டரங்கில் இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளித் தாளாளர் திரு. J. R. இராமமூர்த்தி அவர்கள் தலைமை உரை ஆற்றவும் , தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் திரு. K. இராஜேந்திரன் அவர்கள் ஆண்டறிக்கை வாசிக்கவும் பள்ளியின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களான Er. திரு. M. கோபாலன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினர்.

மாணவரும், சிறப்பு விருந்தினருமான திரு. G. வெங்கடசுப்பிரமணியன், (Project Director, Mettupakkam Foundations Pvt. Ltd., Chennai) ஆண்டு மலரை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். மலரினை பள்ளியின் உதவித்தலைமையாசிரியர்கள் திருமதி. H. நிர்மலா அவர்களும் திரு. S. அண்ணாதுரை அவர்களும் பெற்று கொண்டனர். திரு. G.மதியரசன் அவர்கள் வாழ்த்துச் செய்திகளை வாசித்தார்.


நம் பள்ளியில் 25 ஆண்டு பணி முதிர்வு பெற்ற ஆசிரியர்கள் திரு. S. விஜயரெங்கன் மற்றும் நல்லாசிரியர் திரு. G. மதியரசன் ஆகியோருக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.


2010-2011 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெறச்செய்த 33 ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் கல்வித்துறை சார்பாக
நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளியின் முன்னாள் மாணவர் திரு. R. ஜெயசங்கர், Prop. K.S.M. & R.V.V. Whole sale, அவர்கள் சிறப்புரை ஆற்றி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்கள். ரூ. 30000 மதிப்புள்ள பரிசுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. மாணவர்களால் நிகழத்தப்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.

விழா நிகழ்ச்சிகளை திரு. T. குலசேகரன் மற்றும் திருமதி M. அபிராமிதேவி மற்றும் திரு. D. கலைச்செழியன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். முதுகலை உதவித்தலைமையாசிரியர் திரு கே. பத்மனாபன் அவர்கள் நன்றியுரை ஆற்றவும் நாட்டுப்பண்னுடன் விழா இனிதே நிறைவுற்றது.புதிய வகுப்பறை (Shri. S.K. Hall) கட்டிட திறப்பு விழா

மயிலாடுதுறை டி.பி.டி.ஆர். பெற்றோர் ஆசிரியர் கழக கட்டிட வளாகத்தில் பள்ளியின் முன்னாள் மாணவர் திரு. M. கணேசன், Bank of America, U.S.A., அவர்களால் நன்கொடையாக அளிக்கப்பட்ட ரூ. 5,00,000 (ரூபாய் ஐந்து லட்சம்) மதிப்புள்ள புதிய வகுப்பறைக் கட்டிடத்தை ஓய்வு பெற்ற பள்ளியின் உதவித்தலைமையாசிரியர் நல்லாசிரியர் திரு S. கிருஷணமூர்த்தி B.A., B.Sc., B.Tஅவர்களது நினைவாக Shri. S.K. Hall என்ற பெயரில் அன்னாரது துணைவியார் திருமதி கமலா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் திறந்து வைத்தார்கள். முன்னதாக முதுகலை தமிழாசிரியை திருமதி வி. அபிதகுஜாம்பாள் அவர்கள் திருக்குறள், கடவுள் வாழ்த்து பாக்களைப் பண்ணுடன் இசைத்தார். திரு S.K அவர்களின் புதல்வர் திரு K. முத்துராஜகோபால் அவர்களும், புதல்வி திருமது K.துர்கா ரமணி அவர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.

பள்ளியின் ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு வாஜபேயர் அவர்களது நினைவாக அன்னாரது புதல்வர் பள்ளி வளர்ச்சிநிதிக்கு ரூ 10,001 அளித்து உதவினார். பள்ளியின் முன்னாள் மாணவரும், ஆஸ்த்துமா மற்றும் அலர்ஜி சிறப்பு மருத்துவருமான Dr. திரு. ஸ்ரீதரன் M.D. அவர்கள் பள்ளிக் கட்டிட நிதிக்காக ரூபாய் 10,001 அளித்து உதவினார். விழாவில் பள்ளித் தாளாளர் திரு JR இராமமூர்த்து அவர்கள் தலைமையேற்கவும், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் திரு M. கோபாலன் அவர்கள், திரு ஸ்ரீதரன் அவர்கள், திரு வி.கிருபாநிதி அவர்களுடன் பள்ளித்தலைமையாசிரியர், நல்லாசிரியர் திரு கே.இராஜேந்திரன் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் அலுவலர்களும் கலந்து கொண்டனர். விழாவிம் போது பள்ளியின் கட்டிட வளர்ச்சி நிதிக்காக பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அனைவரும் நன்கொடை அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.No comments: