நடந்து போய்க்கொண்டிருக்கும்போதே
கொஞ்சம் திரும்பி பார்க்கிறேன்!
கடந்து வந்த பாதை
பாதையில் பலர் சொன்ன கருத்துக்கள்
புரியாமல் ஏற்றுக்கொண்டவை சில
புரிந்துக்கொண்டதால் ஏற்று கொள்ளாதவை பல
அலட்சியப்படுத்தியதால் அடிபாடுகளில் சிக்கி கொள்ளவைத்தவையும் கூட கொஞ்சம் இருக்கும்!
இப்பொழுதும் கூட நான் பின்னோக்கி பார்க்கும் பார்வையில் என் மனதினை மிகவும் துன்பபடுத்துவது நான் தவறவிட்ட ஆசிரியர்கள் அவர்கள் தந்த பாடங்கள் வாழ்க்கைக்கு மிக தேவையானதாய்....!
மாணவனாய்...
கற்ற விசயங்களே என்னை இத்தனை உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறதென்றால்
நான் தவறவிட்ட விசயங்கள், வகுப்புக்கள் என்னை கட்டாயம் மேலும் ஒரு நல்ல நிலைக்கு கொண்டு சேர்த்திருக்ககூடும் !
எம்மை பிரம்பால் மிரட்டி,
அன்பால் அதட்டி,
நீங்கள் கற்றுத்தந்தவையே!
இன்று நானும் கூட நம் பள்ளி பற்றி எழுத ஒரு வாய்ப்பினை தந்திருக்கிறது !
நடந்து போய்க்கொண்டிருக்கும்போதே
கொஞ்சம் திரும்பி பார்க்கிறேன்!
ஆம் போகும் பாதை தெளிவாய் இருக்கிறது!
விபத்து ஏற்படாது என்ற நம்பிக்கை
எனக்கு கல்வியால் தான் வந்தது!
நன்றிகளோடு....!
என் பள்ளியுடனான உறவினை தொடர்ந்தபடியே....!
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...
Monday, August 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கல்விக்காக ஒரு கவிதை
வாழ்வில் முதல் முறை கல்வியை முன்னிறுத்தி தற்போதுதான் படிக்கிறேன்.
நன்றாக இருக்கிறது
வாழ்த்துக்கள்
சூப்பரா இருக்கு!!
//கற்ற விசயங்களே என்னை இத்தனை உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறதென்றால்
நான் தவறவிட்ட விசயங்கள், வகுப்புக்கள் என்னை கட்டாயம் மேலும் ஒரு நல்ல நிலைக்கு கொண்டு சேர்த்திருக்ககூடும் //
ச்சே..ஹவ் ட்ரூ!!
இதை படிக்கும்போது நானும் எங்க ஸ்கூல்ல் நினைவுகளில் மூழ்கிட்டேன்!!
Post a Comment