பன்னிரண்டாவது XII பொதுத்தேர்வு முடிவுகள் :
பொதுத்தேர்வு எழுதிய 237 மாணவர்களில் 225 மாணவர்கள் வெற்றி பெற்று எங்கள் பள்ளி தேர்ச்சிவிகிதத்தை 95% சதவிகிதமாக்கினர்.
பொருளாதாரப் பாடப்பிரிவில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றனர். இது ஒரு மிகப்பெரிய வெற்றியாகும்..
12 மாணவர்கள் மட்டுமே வெற்றி வாய்ப்பை இழந்தனர். அதில் கணிதத்தில் இருவர், இயற்பியலில் இருவர், வேதியியலில் ஒருவர், வர்த்தகத்தில் 6 பேர் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.
1200-க்கு 1137 மதிப்பெண்கள் பெற்று எங்கள் பள்ளி மாணவர் P.இராஜகோபாலன் பள்ளியிலேயே முதல் மாணவராக வரப்பெற்றார்.
1200-க்கு 1126 மதிப்பெண்கள் பெற்று மாணவி C.ஷோபனா இரண்டாம் இடத்தையும் , 1111 மதிப்பெண்கள் பெற்று மாணவி அனுப்ரியா மூன்றாமிடத்தையும் பெற்றார்.
பத்தாம் வகுப்பு Xth பொதுத்தேர்வு முடிவுகள் :
பொதுத்தேர்வு எழுதிய 413 மாணவர்களில் 390 மாணவர்கள் வெற்றி பெற்று எங்கள் பள்ளி தேர்ச்சிவிகிதத்தை 95% சதவிகிதமாக்கினர்.
ஆறு மாணவர்கள் கணிதத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்றனர். அறிவியல் பாடத்தில் ஒரு மாணவர் 100/100 பெற்றார். தேர்வு எழுதிய மாணவர்களில் 112 மாணவர்கள் (27 % சதவிகிதம்) 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றது இந்த வருட சாதனை.
500-க்கு 484 மதிப்பெண்கள் பெற்று மாணவர் அஜீத் குமார் எங்கள் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்றார்.. இவர் கணிதத்திலும் அறிவியலிலும் 100/100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்..
500-க்கு 481 பெற்று மாணவி சபீபா இரண்டாமிடத்தையும், 480 பெற்று மாணவி திவ்யா மூன்றாமிடத்தையும் பெற்றார்.
அனைத்து மாணவ மாணவியருக்கும், இந்த சாதனையின் பின் நின்று பெரும் உழைப்பை நல்கிய ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்..
ஒரு பொதுத்துறை பள்ளியில் தேர்வு எழுதிய 413 மாணவர்களில் 112 மாணவர்கள் 400க்கு மேல் மதிப்பெண் பெறுவதென்பது மிகப்பெரிய சாதனைதான்...!!!!!!
3 comments:
தொடரட்டும்... வாழ்த்துகள்!
அன்புள்ள தம்பி தங்கைகளே அனைவருக்கும் வணக்கம்
நான் நமது பள்ளியின் முன்னால் மாணவன். (1983-84 முதல் 1989-90 வரை)
கே.ஆர் ஐயாவிடம் விலங்கியியல் (1988-90) படித்தேன்.
கே.பி ஐயாவிடம் வேதியியல் (1988-90) படித்தேன்.
கே.ஆர் ஐயா அவர்களுக்கு தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது கிடைத்ததை கேட்கும் போது மிக மகிழ்ச்சியாக உள்ளது.
சு.பாலமுருகன்
//நான் நமது பள்ளியின் முன்னால் மாணவன். (1983-84 முதல் 1989-90 வரை)
//
பாலமுருகன், தொடர்பு கொண்டதற்கு நன்றி. உங்கள் இமெயில் முகவரியையும் ஃபோன் நம்பரையும் அப்படியே ஒரு பின்னூட்டமாக இந்த இடுகையில் சேர்த்துவிடுங்கள். அவசியம் தொடர்பு கொள்ள ஆசை.. உங்கள் தொடர்பு எண்கள் பப்ளிஷ் செய்யமாட்டாது.. கவலை வேண்டாம்.
அன்புடன்
சீமாச்சு...
Post a Comment